கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சிறிய ரக லொறியொன்றில் அறுவைக்கு நான்கு மாடுகளைக் கொண்டுசென்ற சாரதி ஒருவர் இன்று(21) காலையில் கைது செய்யப்பட்டுள்ளாரென அக்போபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த விக்கிரம சூரிய தெரிவித்தார்.
அத்துடன் குறித்த மாடுகளையும் அவற்றைக் கொண்டுச்செல்லப் பயன்படுத்தப்பட்ட லொறியையும் கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த மாடுகளையும் அவற்றைக் கொண்டுச்செல்லப் பயன்படுத்தப்பட்ட லொறியையும் கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை அக்போபுர பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட அக்போபுர தல்கஸ்வெவவில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி அறுவைக்காக அதிக மாடுகள் கொண்டுசெல்லப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அந்நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் பொலிஸ் காவல் அரண் அப்பகுதியில் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையிலேயே மேற்படி மாடுகளுடன் சந்தேக நபரை கைது செய்யப்பட்டாரென பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.













