செங்கலடி மரப்பாலம் பிரதேசத்தில் காட்டுயானையினால் வீடு சேதம்!


- செங்கலடி நிருபர் -
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் இன்று (18) புதன்கிழமை நள்ளிரவு 1.45 மணியளவில் காட்டு யானையினால் வீடு சேதமாக்கப்பட்டுள்ளது. 

மரப்பாலம் பாடசாலை வீதியில் வசிக்கும் மருதமுத்து சரவணமுத்து மற்றும் அவரது மணைவி சரவணமுத்து நாகம்மா ஆகியோரே இவ் வீட்டில் வசித்து வருகின்றனர்.
தாம் யானையின் தாக்குதலில் இருந்து சிரமத்தின் மத்தியிலேயே தப்பியதாக தெரிவிக்கின்றனர்.  

யானைத் தாக்கத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பியுள்ளனர் வீடு மற்றும் வீட்டுத்தளபாடங்கள் சிலவும் யானையினால்  சேதமாக்கப்பட்டுள்ளது. 
தமக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பிற்கான தீர்வை பெற்றுத்தருமாரு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பாதிக்கப்பட்டோர் கோருகின்றனர்.