தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் மற்றும் அதன் கீழ் உள்ள ஏனைய அலுவலகங்களிலும் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான உற்பத்தித்திறன் மேம்பாடு தொடர்பான பயிற்சி மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் (17.07.2017) இடம்பெற்றது.
இப்பயிற்சி நெறியினை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உற்பத்தி திறன் மேம்பாடு தொடர்பான பயிற்சிக்கான மாவட்ட இணைப்பாளர் ஆர்.புவனேந்திரன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு வழங்கியிருந்தார்.















