மட்டக்களப்பு பொலிஸ் ஆலோசனை குழு செயலமர்வு இன்று கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை குகனேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான்மெண்டிஸ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலைய பிரிவுகளை உள்ளடக்கிய பொலிஸ் ஆலோசனை குழு பிரதி நிதிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
பொலிஸ்மா அதிபர் பூஜீத்ஜெயசுந்தர அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
பொலிஸ் ஆலோசனைக் குழுக்களுடனான இன்றைய கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு இதன்போது தீர்வு காணப்பட்டது.

















