நிறுத்திவைக்கப்படும் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் திருட்டு !


(செ.துஜியந்தன்)
கல்முனை பிரதேசத்தில் வீதிகளிலும், வீடுகளிலும் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் திருடப்பட்டுவருவதாக வாகன உரிமையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
சமீபகால கல்முனை பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களின் வெற்றி, டயர், கண்ணாடி, மோட்டர் உட்பட வாகனங்களின் உதிரிப்பாகங்கள் களவாடப்பட்டுவருகின்றது. மிகவும் நூதனமான முறையில் இவ்வாறான திருட்டில் திருடருடர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் வாகன உரிமையாளர்கள் மன உளைச்சலுக்கும், பொருளாதார ரீதியிலான பாதிப்புக்கும் ஆளாகிவருகின்றனர். அதிகமாக கனரகவாகனங்கள், முச்சக்கரவாகனங்கள், மோட்டார் சைக்கிள் என்பவற்றின் உதிரிப்பாகங்களே களவாடப்பட்டுவருகின்றது. 

இரவுவேளையில் வீடுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் உதிரிப்பாகங்களும் திருடப்பட்டுவருகின்றன. இவ்வாறான திருட்டுச்சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.