இன்று கதிர்காமம் உகந்தையில் தீர்த்தோற்சவம்!


(காரைதீவு நிருபர் சகா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயம் மற்றும் உகந்தை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம் இன்று(28) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

அதற்காக நேற்று வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான அடியார்கள் இவ் இரு ஆலயங்களுக்கும் போய்ச்சேர்ந்துள்ளனர்.

இவ்வாலயங்களின் கொடியேற்ற உற்சவம் கடந்த 13ஆம் திகதி வெகுசிறப்பாக நடைபெற்றன. கடந்த 15 தினங்களாக ஆடிவேல்விழா திருவிழா சிறப்பாக நடைபெற்றுவந்தன.

இதேவேளை காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்தோற்சவமும் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.