சட்டவிரோத மான் இறைச்சி விற்பனை !

(கதிரவன் திருகோணமலை)
மான் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை வனசீவரசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை 2018.07.27 திருகொணமலை வடக்கு ஹோமர்கடவெல பிரதேசத்தில் போஹா சந்தியில் உள்ள கடையில் இறைச்சி விற்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடையை சோதனையிட்ட போதே இறைச்சி கைப்பற்றப்பட்டது. 

இதனை பதப்படுத்தி வைத்திருந்க பயன்படுத்தப்பட்ட குளிர்சாதன பெட்டியையும் இவர்கள் கைப்பற்றினர். விற்பனைக்காக 1கிலோ நிறையில் 11 பொதிகள் வைக்கப்பட்டு இருந்தது. இச்சம்வம் தொடர்பாக அங்கிருந்த இருவரையும் இவர்கள் கைது செய்துள்ளனர்.