(24) செவ்வாய்க்கிழமை எருவில் வைத்தியசாலைவீதியில் பிப. 2.45 மணியளவில் இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த கணவன், கர்ப்பிணியான மனைவி, ஏழுவயது சிறுமி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதில் எருவில் புளியடிப்பிள்ளையார் கோவில் வீதியைச்சேர்ந்த அழகையா ரஜனிகாந்(31வயது), ரஜனிகாந் ஆனந்தகீதா(31வயது), ரஜனிகாந் நிதர்சனா(07வயது) ஆகியோரே காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணித்த மோட்டார்சைக்கிள் மீது எதிரே வந்த வான் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிகவிசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வேன் இம் மோட்டார் சைக்கிளுடன் மோதுவதற்கு முன்னர் வேறொரு வேன் உடன் களுவான்சிக்குடி பிரதான வீதியில் விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்றமை CCTV காணொளி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ் இரு விபத்தினையும் ஏற்படுத்தி விட்டு வேன் சாரதி தப்பித்த நிலையில், அவர் மது போதையில் வாகனம் செலுத்தியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.













