திருகோணமலை ஸ்பென்ஸ் கழகம் நடத்திய 3வது ஸ்பென்ஸ் பிறிமியர் லீக் போட்டி



(கதிரவன்)
திருகோணமலை ஸ்பென்ஸ் கழகம் நடத்திய 3வது ஸ்பென்ஸ் பிறிமியர் லீக் போட்டியில் சென் அந்தனீஸ் கழகம் சம்பியனானது.  அணிக்கு அறுவர் 5 பந்துரிமாற்றம் கொண்ட இச்சுற்றுப்போட்டி வெள்ளிக்கிழமை 2018.08.24 ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற இத்தொடரில் இதில் 21 கழகங்களைச் சேர்ந்த 31 அணிகள் பங்கு கொண்டன.

இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை 2018.08.26 மாலை 3.30 மணிக்கு ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென் அந்தனீஸ் கழகத்தை எதிர்த்து கிண்ணியா அல்புறூச் கழகம் பங்கு கொண்டது.  முதலில் துடுப்பெடுத்தாடிய சென் அந்தனீஸ் கழகம் 3 இலக்குகளை இழந்து 74 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு  களம் புகுந்த அல்புறூச் கழகம் 2 இலக்குகளை இழந்து 29 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் சென் அந்தனீஸ் கழகம் 45 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனானது.

இச்சுற்றுப்போட்டியில் மூன்றாம் இடத்தினை வேல்ஸ் கழகம் பெற்றுக்கொண்டது. சம்பியன் அணிக்கு திருகோணமலை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பா.வசந்தகுமார் அவர்களும், இரண்டாம் இடம் பெற்ற அல்புறூச் கழகத்திற்கு ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி விளையாட்டு பொறுப்பாசிரியர் சி.சசிகுமாரும்., மூன்றாம் இடம் பெற்ற வேல்ஸ் கழகத்திற்கு ஸ்பென்ஸ் விளையாட்டு கழகத்தின் மூத்தவீரர் எஸ்.ரூபனும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர். சம்பியன் அணி வீரர்களை படத்தில் காணலாம்.