மாலை வேளையில் வீசிய கடும் காற்றால் 76 வீடுகள் சேதம்

அம்பாறை - நவகம்புர மற்றும் சம்மாந்துறை உட்பட பல பிரதேசங்களில் கடும் காற்று வீசியதினால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

76 வீடுகள் இவ்வாறு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் மழையுடன் காற்று வீசியுள்ளதுடன் நவகம்புர பிரதேசத்தில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.