மருதமுனை அல்-மானார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்புகளுள் ஒன்றான மனாரியன் 99 அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த இரத்ததான நிகழ்வு இன்று (12.08.2018) மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பெண்கள் மற்றும் ஆரம்பப் பிரிவில் சிறப்பாக நடந்தேறியது.
மேற்படி நிகழ்வானது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் அனுசரணையுடன் நடைபெற்றதோடு அப் பிரிவின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் சிறப்பான பங்களிப்பும் இன் நிகழ்வின் வெற்றிக்கு வித்திட்டது.
இரண்டாவது வருடமாக முன்னெடுக்கப்பட்ட இவ் இரத்த தான முகாமுக்கான ஏற்பாடுகள் மனாரியன் 99 அமைப்பினரின் பொருத்தமான செயற்பாடுகளைக் கொண்டு வெற்றியடைந்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.
இம் முகாமில் மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த 51 பேரின் இரத்த தானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, குறிப்பாக 3 பெண்களும் இதன்போது இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.