நாவற்குடா இராமகிருஷ்ண மிஷன் முன்பள்ளி உடல் இயக்கத் திறன் வெளிப்பாடுட்டு விழா


நாவற்குடா, விவேகானந்தபுரம், இராமகிருஷ்ண மிஷன் முன்பள்ளி 21 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணவர்களின் உடல் இயக்கத் திறன் வெளிப்பாடுட்டு விழாவானது, 04.08.2018 சனிக்கிழமை பி .ப 4.00 மணி வேளையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மகராஜ் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வு சுவாமிஜி அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமானது.

நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாலர் பாடசாலை செயலாற்றுப் பணிப்பாளர் S.சசிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக நாவற்குடா ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய பிரதம குரு உ.ஜெயக்கிருஷ்ணா, மட்/புனித மிக்கேல் கல்லூரி பிரதி அதிபர் ச.தயாபரன் அவர்களும்

சிறப்பு அதிதிகளாக மட்/கோவிற்குளம் விநாயகர் வித்தியாலய ஆசிரியர் திருமதி உ.ரசிதரன்,நாவற்குடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொருளாளர் M. செல்வராசா, நாவற்குடா நியூ கிரீன் விளையாட்டுக் கழக தலைவர் R.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.