இதில்
Internet of Things (IOT)
Auto Mobile and Electrical
Web application, Mobile application and Desktop Application, Robotics
போன்ற பிரிவுகளில் கண்டுப்பிடிப்பாளர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தபடவிருப்புத குறிப்பிடத்தக்குத.
இந்நிகழ்வானது இளம் தலைமுறையினரின் தொழில்நுட்வியல் கண்டுபிடிப்புக்களுக்கான களத்தினை அமைத்துக்கொடுக்கும் நோக்குடன் கிழக்குமாகாணத்தில் முதன் முதலாக ஏற்பாடு செய்யப்படுகின்றுத. இதில் மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள உயர்தொழில் நுட்டக்கல்லூரி மாணவர்களின் படைப்புக்கள், மட்டக்களப்பு மாவட்ட மணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் இராணவத்தினரின் படைப்புக்கள் என்பன காட்சிப்படுத்தப்படவிருக்கின்றது.
மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன் அவர்களின் தலைமையில் ஆரம்ப மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் முதல் நாள் நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பு மவாவட்ட செயலளாளர் திரு.மா.உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக கிழக்கு கட்டகளைத்தளபதி மேஜ ஜெனரல் எச்.டபிள்யு.எஸ்.பனன்வல அவர்களும் இலங்கை உயர்தொழல்நுடபவியல் நிறுவனத்தின் நிதி மற்றும நிருவாக பிரதிப் பணிப்பாளர் நாயகம் திரு.என்.எம்.கே..கே.நவரத்தின அவர்களும் கலந்த சிறப்பிக்க உள்ளனர்.
மட்டக்களபப்பு உயர்தொழில்நுட்பக் கல்லூரியின் தகவல் தொழில்பிரிவு மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மாவட்ட செயலக உழியர்கள் மற்றும் இராணுவத்தினர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பாடசாலை விடுமுறை தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்களுக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்துகொள்வுது வரவேற்கத்தக்கதாகும்.
அனுமதி இலவசம் என்பதுடன் மட்டக்களப்பு மாவட்ட முயற்சியாளர்களின் கிராமத்து உணவுப்பொருட்கள் மற்றும் கைத்தொழில் பொருட்களும் கண்காட்சியும் விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.













