
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வு 22.08.2018 புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வுக்குரிய கிரியாரம்பமானது 18.08.2018 சனிக்கிழமை ஆரம்பமாகி 21.08.2018 நாளை செவ்வாய்க்கிழமை எண்ணெய்க்காப்பு சாற்றும் நிகழ்வு நடைபெறும்.
எண்ணெய்க்காப்பு சாற்றும் நிகழ்வை அடுத்து புதன்கிமை கும்பாபிஷேகம் நடைபெறுவதுடன் 02.09.2018 சனிக்கிழமை அன்று சங்காபிசேகம் நிகழ்த்தப்படும்.
இந் நிகழ்வுக்கான கிரிகைகள் பிரதிஷ்டா பிரதமகுரு சிவஸ்ரீ மு.கி. சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றது.














