கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 16ந்திகதி வியாழன் இரவு பூர்வாங்க அரம்ப கிரியைகள் நடைபெற்று, மறுநாள் எதிர்வரும் 17ந் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெறும். ஆன்றைய தினம் இரவு முதலாம் நாள் திருவிழா செட்டிகுடி மற்றும் பெரியகவுத்தன்கடி மக்களால நடாத்தப்படும்.
2ம் நாள் திருவிழா 18 சனியன்று குருக்கள் குடி மக்களாலும், 3ம் நாள் திருவிழா 19 ஞாயிறன்று தேவேந்திரகுடி மற்றும்பட்டணக்குடி மக்களாலும 4ம் நாள் திருவிழா 20 திங்களன்று சிங்களக்குடி மக்களாலும், 5ம் நாள் திருவிழா 21செவ்வாயன்று நவுத்தன்குடி மக்களாலும். 6ம் நாள் திருவிழா 22 புதனன்று வச்சினாகுடி மக்களாலும். 7ம் நாள் திருவிழா 23வியாழனன்று குருக்கள் அத்தியாகுடி மக்களாலும். 8ம் நாள் திருவேட்டைத் திருவிழா செட்டிப்போடியார் அத்தியாகுடி மக்களாலும். 25 சனியன்று தன்மன்செட்டிகுடி மக்களால் தேரோட்டமும், 26 ஞாயிறு கிராம மக்களால் தீர்த்தோற்சவமும் நடைபெறும். அன்றையதினம் இரவு திருப்பொன்னூஞ்சல் கொடியிறக்கம் என்பனவும் இடம் பெறும்.
கிரியைகளுக்கான குருமார் விபரம் பின்வருமாறு பிரதமகுர கிரியா இளஞ்சுடர் சத்தியோசாத்சிவச்சாரியார் சிவஸ்ரீ அ.கு.இலிகிதராசக் குருக்கள். சர்வசாதகாசிரியர் சிவஸ்ரீ தே.டிவெஸ்காந் சர்மா (ஆலயத்தின் பிரதம குரு), பரிசாதகர் சிவஸ்ரீசந்திர சுதாகரசர்மா.













