இந்த முறை புலமைப் பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பங்குபற்றினர்.
இதேவேளை, இன்று இடம்பெற்ற பரீட்சையின் வினாத் தாள்களை கையிருப்பில் வைத்திருத்தல், விற்பனை செய்தல், அச்சிடல் மற்றும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பரீட்சையில் விடையளித்தமை மற்றும் பரீட்சை தொடர்பில் தேவையற்ற கேள்விகளை மாணவர்களிடம் கேட்க வேண்டாம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஊடக அறிக்கை மூலம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.













