சர்வதேச ஒலிம்பியாட் கணித போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை


சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் கணித போட்டியில் மட்/புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் பதக்கம் வென்று மட்டக்களப்பு மண்ணிற்கும், கல்லூரிக்கும், கல்வி வலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் - 2, வெண்கல பதக்கம் - 3, உயர் சித்தி - 6
பெற்றுள்ளனர்

இதில் வெள்ளிப் பதக்கத்தை S.றுகேஸ் (தரம் 8) , S. ஹரிஷ்ணா (தரம் 11), வெண்கலப்பதக்கத்தை T. இமயவன் (தரம் 11), M.H.A. சஹில் (தரம் 9), N. நேதுஜன் (தரம் 9) ,திறமைச் சித்தியினை G. சந்த்றேஸ் (தரம் 6), S.பிரவிந்த் (தரம் 6) N.நாகுல் (தரம் 9) V.சசாங்கன் (தரம் 10) D.தெமக்சன் (தரம் 11) Z.D. சைனி ஹஷ்சன்சிய (தரம் 11)

இவர்களை வழிநடத்திய கணித ஆசிரியர் திரு.சீலன் அவர்களுக்கும், அதிபர் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் கல்லூரி சமூகம் நன்றி கூறுகின்றது.