திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பாடசாலைகளுக்கு இடையே பாரிய உதைபந்து சுற்றுப் போட்டி ஒன்றினை நடத்துகிறது. இதற்காக நாட்டில் பிரபல்யமான 9 பாடசாலைகளை இதற்கு அழைத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இடையே இப்போட்டி நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் மாதம் செப்தெம்பர் 7,8.9ம் திகதிகளில் ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் விலகல் முறையில் இச்சுற்றுப்போட்டி இடம்பெற உள்ளது. இதில் புனித சூசையப்பர் கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், செட்டிக்குளம் மகா வித்தியாலயம், மன்னார் புனித சவேரியார் வித்தியாலயம், இளவாலை புனித ஹென்றி கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி, புத்தளம் ஷாகிரா கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி, நுவரெலியா ஹோலி திரித்துவ மத்திய கல்லூரி, குருணாகல் மதீனா தேசிய பாடசாலை அணிகள் இதில் பங்கு கொள்கின்றன.
லைக்கா சொக்கர் கிங்ஸ் வோர் என இச்சுற்றுப் போட்டிக்கு பெயரிடப்பட்டுள்ளது. முதலிடம் பெறும் அணிக்கு 100,000.00 பணப்பரிசும், இரண்டாம் இடம்பெறும் அணிக்கு 50,000.00 மூன்றாம் இடம்பெறும் அணிக்கு 30,000.00, நான்காம் இடம்பெறும் அணிக்கு 20,000.00 பணப்பரிசும் வெற்றிக்கிண்ணங்களுக்கு புறம்பாக வழங்கப்பட உள்ளது.
பங்கு கொள்ளும் பாடசாலைகளுக்கு கோல உடைகள், உணவு, தங்கும் இடம் என்பன பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட உள்ளது. இது பற்றி அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை 2018.08.18 மாலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.