
தாழங்குடா ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவமானது 21.08.2018 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவைடையவுள்ளது.
சடங்கு நிகழ்வின் விஷேட அம்சமான தீ மிதிப்பு வைபவம் 25.08.2018 சனிக்கிழமை மாலை இடம்பெறவிருக்கின்றது.
இதன் முதற்கட்டமாக இன்று காலை அம்பாளுக்கு அடியார்களால் மண்முனைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி எடுத்துவரப்பட்டு சங்காபிஷேக நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிரிகை நிகழ்வுகளை ஆலய பூசகர் சிவஸ்ரீ வ.வல்லிபுரம் குருக்கள் அவர்களும் உதவிப் பூசகர்களாக ந.துவாகரன், மா.நமசிவாயம் அவர்களும் நடத்துகின்றனர்.



































