இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பினை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தனது 64வது பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று (திங்கட்கிழமை) காலை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து ஆலயத்தினையும், புனரமைக்கப்பட்டு வரும் மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த கேணியையும் ஆளுநர் பார்வையிட்டார்.
அத்துடன், மாமாங்கேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான போக்குவரத்து பாதையாகவுள்ள மாமாங்கேஸ்வரர் ஆலய வீதி புனரமைக்கப்பட்டு இதன்போது திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண உதவி நிதி திட்டத்தின் கீழ் 20 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4















