கல்லடி பேச்சியம்மன் ஆலயத்தில் நெல்குத்தும் சடங்கு சிறப்பாக நடைபெற்றது


(க. விஜயரெத்தினம்)
வரலாற்று சிறப்புமிக்க கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.8.2018) திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமானது.

அடியார்கள் பேச்சித்தாயாருக்கு நேர்த்தி வைத்து மடிப்பிச்சை எடுத்து வந்த நெல்லை அம்பாளுக்கு குத்தி பொங்கல் படைக்கும் நிகழ்வு சிறப்பானது.நெல்குத்துதல் சடங்கு ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.

இதன்போது பிள்ளைவரம் கேட்டும், இன்னும் பல செல்வங்களை பேச்சியம்மன் நிறைவேற்ற வேண்டு மென்றும் ஆலயத்தில் பூசை வழிபாடுகளும், நெல்குத்தும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.