மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ கொடியேற்றத் திருவிழா (வீடியோ)



(வரதன்)
கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற முர்த்தி, தலம், தீர்த்தம்  என்பன அமையப்பெற்றதும் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முதல் திருவிழா இன்று விசேட பூஜைகளின் பின் நண்பகல் ஆயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா கோசத்துடன் பக்தி பூர்வமாக மாமாங்கப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம் ஆலயத்தில் இடம்பெற்றது.
 
ஆலயப்பிரதம குரு சிவசிறி ஆதி சௌந்தரராஜா குருக்கள் தலைமையில் பூஜை நிகழ்வுகள் யாவும் நடாத்தப்பட்டது. நேற்று மாலை ஆலயத்தின் கொடிச்சிலையானது மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து எடுத்து வரப்பட்டு இன்று இக் கொடியேற்ற நிகழ்வுடன் மஹோற்சவம் ஆரம்பாமாகியுள்ளது. 

இவ் ஆலய வருடாந்த உற்சவத்தின் விசேட திருவிழாவான தேர்த்திருவிழா நிகழ்வானது 10.08.2018 அன்று காலை இடம்பெறவுள்ளது. இப் புதிய தேருக்கான வெள்ளோட்டம் அண்மையில் நடைபெற்று திருவிழாவில் மீண்டும் அடியார்கள் வடம் பிடிக்க ஆலய வீதியில் தரித்து நிற்கிறது.

கிழக்கு மாகாணத்தில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் ஆலயங்களில் முதன்மையான ஆலயமாக விளங்கும் இங்கு இறந்த உறவுகளை நினைத்து உறவினர்கள் ஆலயக் குருக்களிடம் பிதிர்க்கடன்களை செலுத்தி ஆலயத்தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடி அன்னதான நிகழ்வுகளில் கலந்து கொள்ளுவார்கள் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் 11.08.2018-அன்று ஆலயத் தீர்த்தக்கேணியில் இடம்பெற்றயுள்ளது.