மட்டக்களப்பில் உள்ள தனியார் வங்கியில் வெற்றிடம் நிலவுகிறது. இதற்கான வெற்றிடங்களை நிரப்ப நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாகவும் பிரபல பாடசாலை ஒன்றுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை நம்பி பல மாணவர்கள் உரிய தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டபோது அவர்களை குறித்த தொகை பணத்தை e cash மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பல மாணவர்கள் பணத்தை அனுப்பி உள்ளார்கள். இது ஒரு ஏமாற்று நடவடிக்கை என அறிய முடிகிறது. மாணவர்கள் இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயற்படவும்..
குறிப்பாக இதில் ஏமாற்றப் பட்டவர்கள் உயர்தரம் படிக்கும் மாணவிகளாவர்..
பலர் இதில் ஏமாற்றப் பட்டுள்ளதுடன் பல இலட்சம் பண மோசடியும் நிகழ்ந்துள்ளது.













