மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு ! நோயாளர்கள் பாதிப்பு - சிகிச்சை பெற முடியாமல் மீண்டும் வீடு திரும்பினர்...!


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல மருத்துவமனைகளின் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக தூர பிரதேசங்களிலிருந்து பிரதான மருத்துமனைகளுக்கு சென்ற நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை எட்டு மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.