
மட்டக்களப்பு கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய ஆடிப்பூர பாற்குட பவனி நிகழ்வானது வெகு சிறப்பாக திங்கள் கிழமை (13) நடைபெற்றது. ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குட பவனி நிகழ்வு மட்டக்களப்பின் பிரதான வீதிகளின் வழியாக ஆலயத்தினை வந்தடைந்தது.
நூற்றுக்கணக்கான பெண் அடியார்கள் பாற்குடத்தினை சுமந்து சென்ற காட்சி பார்ப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இறுதியாக அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பூஜை நடாத்தப்பட்டது. கலந்துகொண்ட அடியார்களுக்கு தாகசாந்தி நிகழ்வுகளும், அன்னதான நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



































