திருப்பழுகாமம் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய வருடாந்த மஹோற்சவ திருவிழா


மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்புறத்தே அமைந்துள்ள பழம்பெரும் கிராமம் திருப்பழுகாமம் தன்னில் நம்பி வருவோருக்கு நாடி நல்லருள் பாலிக்கும் நாராயணன் ஆலயமானது கடந்த 2018.08.24ம் திகதி ஆவணி ரோகினி நட்சத்திரத்தில் அஸ்டம திதியில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 

தொடர்ந்து ஐந்து நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று 2018.08.29ம் திகதியாகிய  6ம் நாள் செம்பகராசன் வம்ச கச்சிலாகுடி சாகிய மக்களினால் குபேர லக்ஸ்மி (சுவர்ணலக்ஸ்மி) திருவிழாவானது சகல சௌபாக்கியக்கியங்களும் சகலரும் பெற்று லெஷ்சுமிகடாட்சத்துடன் புரோகிதர்களின் மந்திர உற்சாடனத்துடன் மேள வாத்தியம் முழங்க இறைபக்தியுடன் நடைபெற்றது.

தொடந்து இன்னும் சில திருவிழாக்கள் நடைபெற்று இறுதியில் 2018.09.02ம் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் திருவேட்டை திருவிழாவுடன் மறுநாள் 2018.09.03ம் திகதியன்று திர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைபெற இறையருள் பாலித்துள்ளது.