
கல்வியை பெறுகின்ற முன்பள்ளி பருவமானது ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டிய அத்தியாவசியமான உரிமையாகும். அதன் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச சபை பிரதேசத்தின் சகல முன்பள்ளிகளையும் சிறப்பான முறையில் கல்வி வழங்குவதற்கான நிகழ்சி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இன்றைய கல்வித் திட்டத்தில் ஓர் இணைப்பாட விதான செயற்பாடாக காணப்படுகின்ற விளையாட்டு விழா பொதுவாக முன்பள்ளியிலே கல்வி கற்றல் நடவடிக்கைகளை தவீர விளையாட்டுடன் கூடிய மகிழ்சியான நிகழ்வுகளை மாணவர்கள் மத்தியில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதே கல்விக்கொள்கையின் திட்டமாகும். என கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் கூறினார்.
கோறளைப்பற்று பிரதேச சபையின் கலைமகள் முன்பள்ளியின் 17 ஆவது விளையாட்டு விழா நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தமது உரையில் தெரிவிக்கையில் ஆசிரியர்களின் வழிகாட்டலிலும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள். நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பானது. இவ் முன்பள்ளியானது எமது பிரதேச சபையினால் 1977 காலப்பகுதியில் உள்வாங்கப்ட்ட முன்பள்ளியாகும்.
இங்கு வளப்பற்றாக்குறை மற்றும் அடிப்படை தேவைகள் தொடர்பாக தெரிவிக்கப்ட்டது. எமது கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் 5 முன்பள்ளி பாடசாலைகளுக்கான வலுவூட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் இப்பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். குறித்த வலுவூட்டல் திட்டம் தங்களுக்கு கிடைக்காமல் போனால் எமது பிரதேச சபையினால் முன்பள்ளிகளை திருத்தி அமைத்து அதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எமது சபையில் கூட்ட தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
அந்த வகையில் இப்பாடசாலையின் குறைபாடுகளும் வளப்பற்றாக்குறையும் நிவர்த்தி செய்யப்படும். பாடசாலையின் அபவிருத்தியில் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியமானதொன்றாகும். ஏனையோர்களிடம் இருந்து எதிர்பார்ப்புக்களை எதிர்பார்பதனைவிட பெற்றோர்களும் உதவிகளை வழங்க முன்வரவேண்டும். இதன்போது எங்களால் ஆன உதவிகளை நாங்கம் வழங்குவோம் என்றார்.
முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி எஸ்.மோகனதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான நா.திரவியம் (ஜெயம்) பிரதேச சபை செயலாளர் அ.தினேஸ்குமார் கல்குடா வலய ஆரம்ப கல்வி உத்தியோகஸ்த்தர் என்.சனார்த்தனன் முன்பள்ளிப்பருவ வெளிக்கள உத்தியோகஸ்த்தர் வி.கயல்விழி கிராமசேவகர் கே.கஜேந்திரராஜா ஆகியோர்கள் அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.





























