விசேட மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு !


விசேட மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது எல்லை 63 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், அரச நிர்வாக மற்றம் சட்ட ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் கடந்த திங்கட் கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இது கடந்த வருடம் ஜூலை மாதம் 6ஆம் திகதியில் இருந்து செல்லுப்படியாகும் எனவும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் விசேட மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.