நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகிய தம்பதிகளும் அவர்களது குழந்தைகளும் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள நிலையில், அவர்களது மேன்முறையீடு மெல்பேர்ன் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தீர்ப்பினை திகதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்திருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அவர்கள் தொடர்ந்தும் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விவாதத்தின் போது, குறித்த ஏதிலிகள் இருவரும் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் முறையாக நடத்தப்படவில்லை என்றும், நாடுகடத்தல் குறித்த முன்னறிவிக்கப்படவில்லை என்றும் அவர்களது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் அவர்கள் நாடுகடத்தல் குறித்த அச்சுறுத்தல் காரணமாக, மனமுடைந்திருப்பதாகவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.













