திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்



திருகோணமலை – புடவைக்கட்டு பகுதி மீனவர்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

கடற்றொழில் திணைக்களத்தால் அனுமதியளிக்கப்பட்டுள்ள சில முறைகளில் பிடிக்கப்படும் மீன் வகைகளையும், சட்டவிரோதமான முறையிலேயே பிடிப்பதாக தெரிவித்து அதிகாரிகள் அதனை கையகப்படுத்துவதாகவும் மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.