
300 ஆண்டுகளுக்கும் பழமைவாய்ந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டமைந்ததும், சுவாமி விபுலானந்தரால் தரிசிக்கப்பட்டு தியானம் மேற்கொள்ளப்பட்டதுமான அன்னை கல்லடி பேச்சியம்மன் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) பூஜை நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் கலந்துகொண்டனர்.
இலங்கை இராமகிருஷ்ணமிசன் புதிய தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மற்றும் மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தர் ஜீ ஆகியோர் பூஜையில் கலந்துகொண்டு அன்னையின் அருள் வேண்டி தரிசித்தனர்.
மேலும் நிகழ்வில் ஆலய தலைவர் S. சந்திரகுமார், முகாமையாளர் N. ஹரிதாஸ், கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் S. தேவசிங்கன், மாநகர சபை உறுப்பினர் ஸ்ரீஸ்கந்தராசா, சைவப்புலவர் மு.சேமகரன் மற்றும் ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


















