எருவிலில் மது போதையில் நடந்த விபத்து! கர்ப்பிணி தாய் உயிரிழப்பு! தந்தை கவலைக்கிடம்; மகளுக்கு கால் முறிந்த பரிதாபம்!! (CCTV காணொளி)



(செ.துஜியந்தன்)கடந்த(24) செவ்வாய்க்கிழமை எருவில் வைத்தியசாலைவீதியில் பிப. 2.45 மணியளவில் இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த கணவன், கர்ப்பிணியான மனைவி, ஏழுவயது சிறுமி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் எருவில் புளியடிப்பிள்ளையார் கோவில் வீதியைச்சேர்ந்த அழகையா ரஜனிகாந்(31வயது), ரஜனிகாந் ஆனந்தகீதா(31வயது), ரஜனிகாந் நிதர்சனா(07வயது) ஆகியோரே காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

அங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி தாயான ஆனந்திகா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். குடும்பத் தலைவர் ரஜனிகாந்த் சுய நினைவு இல்லாமல் கோமா நிலைக்கு உள்ளாகியுள்ளார், மகள் நிதர்சனா கால் உடைந்து நடக்க முடியாத நிலைக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் பயணித்த மோட்டார்சைக்கிள் மீது எதிரே வந்த வான் மோதியதால்  இவ் விபத்து ஏற்பட்டதுடன், குறித்த வேன் இம் மோட்டார் சைக்கிளுடன் மோதுவதற்கு முன்னர் வேறொரு வேன் உடன் களுவான்சிக்குடி பிரதான வீதியில் விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்றமை CCTV காணொளி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ் இரு விபத்தினையும் ஏற்படுத்தி விட்டு தப்பித்த வேன் சாரதி மது போதையில் வாகனம் செலுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் களுவாஞ்சிக்குடி போலீசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கு.