தம்பிலுவில்லில் இரவுநேர கிரிக்கெட் சுற்றுப்போட்டி - Night Cricket Match


தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் 2000 வருட சாதாரண தர  மாணவர்களின் ஏற்பாட்டில் பிரமாண்ட மின்னொளியில் இரவுநேர   அணிக்கு 07 வீரர்கள் கொண்ட  5 ஓவர் மட்டுபடுத்தப்பட்ட மென்பந்து  கிரிக்கெட்  சுற்றுப்போட்டி நிகழ்வானது2018.08.03 திகதி வெள்ளிக்கிழமை    இரவு 7.00மணியளவில்  தம்பிலுவில் ஆதவன் பொது விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக ஆரம்பமானது.

இதன் முதலாவது போட்டியில் தம்பட்டை ஏலவேன் ஸ்டார் அணியினரும் மற்றும் அக்கரைப்பற்று  ரிப்பில் ஏ அணியினருக்கும் இடையில் நடைபெற்றது.

இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில்அதிதியாக  திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இராசையா வில்ஷன் கமலராஜன்  மற்றும்  இப் போட்டியின் பிரதான அனுசரனையாளர் தம்பிலுவில் உஷா ஜுவலர்ஸ் இன் உரிமையாளர்   ஜீ.எஸ். காந்தன், இணை  அணுசரனையாளர் கே.எம்.ஆர் மோட்டோர்ஸ் உரிமையார்  கிரிதரன் மற்றும்  சிறப்பு அதிதியாக லண்டன் லூசியம் சிவன் கோயில் அறங்காவலர் சபையின் பொருளாளர்   சுகுமார் அவர்களும், 2000 வருட சாதாரண தர மாணவர்கள்  மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


மேலும் இப்போட்டியின் போது 1ஆம் இடம் பெறும் அணிக்கு 40,000/= பணப்பரிசிலும், வெற்றிக்கிண்ணமும், 2ஆம் இடம் பெறும் அணிக்கு 20,000/= பணப்பரிசிலும், வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளது. மேலும் இதன் இறுதி போட்டிநிகழ்வு இன்றிரவு  2018.08.05  ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.