வின்சென்ற் மகளீர் உயர்தர பாடசாலையின் 198 வது தினத்தை முன்னிட்டு இன்று காலை மட் ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் காலை 7 மணிக்கு பாடசாலைக்கு நல்லாசி வேண்டி பூஜை நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி கரண்யா சுபாகரன் தலைமையில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மட் புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்தில் ஆசிர்வாத பிராத்தனையும் இடம்பெற்றது.
தொடர்ந்து பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டு கேக் வெட்டி பிறந்த நாள் வாழ்த்து இசைக்கப்பட்டு பாடசாலையின் 198 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசிகளும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது. பிரதி அதிபர் முன்னாள் அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இவ்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

































