சிவாநந்தியன் விருது விழா -2017: இன்று பி.ப 5.00 மணிக்கு சிவாநந்தா தேசிய பாடசாலையில்

சிவாநந்தாவில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி மற்றும் புறக்கிருத்தியச் செயற்பாடுகளின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் சிவாநந்தா பழைய மாணவர் சங்கம் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் சிவாநந்தியன் விருது வழங்கும் விழா கடந்த வருடம் சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இவ் வருடத்திற்கான சிவாநந்தியன் விருது விழா சிவாநந்தா பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.மு.முருகவேள் தலைமையில் இன்று பி.ப 5.00 மணிக்கு சிவாநந்தா தேசிய பாடசாலை வெளியரங்கில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

சிவாநந்தா தேசிய பாடசாலையில் படித்து 2017/2018 கற்கையாண்டில்  பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்கள் மற்றும் தேசிய ரீதியில் விளையாட்டுத் துறை சார்பாக சாதனை படைத்த மாணவர்கள் இன்று நடைபெறவிருக்கும் சிவாநந்தியன் விருது விழாவில் கௌரவிக்கப்படவிருக்கின்றனர். 

மேற்படி நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்சஜானந்தஜீ மஹராஜ் அவர்கள்  நிகழ்வை சிறப்பிக்கவுள்ளதோடு, மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ தி.சரவணபவான் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். 

மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றனர் சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தினர்.