(-செங்கலடி நிருபர் சுபா-)
தியாகி திலீபனின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வந்தாறுமூலை கிழக்கு பல்பலைக்கழகத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தல் இன்று (புதன்கிழமை) மாலை 6.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கும் ஆலயத்தில் உணர்வுபூர்வமாக கலைகலாசார பீட மாணவர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது.
வடக்கு-கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்இ தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்இ அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்இ ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும்இ தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் ஆகிய ஜந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு திலீபன் என அனைவராலும் அறியப்படும் (இராசையா பார்த்தீபன்) தனது உயிரை தியாகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



















