
இலங்கையின் காவல்துறையின் 152 ஆவது பூர்த்தி நிகழ்வினை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சயபெரமுன தலைமையில் முக்கிய சில நிகழ்வுகள் இன்று திங்கள் கிழமை காலை இடம்பெற்றது.
மயிலங்கரைச்சை ஸ்ரீ மாகாபோதியில் சர்வமத பிரார்த்தனைகளும் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
தேசிய மற்றும் பொலிஸ் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் பொலிஸ் கொடி ஏற்றப்பட்டது. பொலிஸ்மா அதிபர் பூஜீத் ஜெயசுந்தரவினால் அனுப்பிவைக்கப்பட்ட செய்தி பொலிசார் மத்தியில் வாசிக்கப்பட்டது.பொலிஸ் வளாகத்தில் மர நடுகை நிகழ்வு மற்றும் விசேட தேவையுடைய பெண்களுக்கு முச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்ட்டது.
















