
(வரதன்)
சுகாதார அமைச்சி மற்றும் ஜனாதிபதி செயலகமும் டெங்கு ஒழிப்புப் பிரிவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையும் இணைந்து இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குப் பரிசோதனை பணியினை கல்லடி பிரதேசத்தில் முன்னெடுத்தனர். இங்கு வீடுகள் அரசாங்க மற்றும் பொதுக் கட்டிடங்கள் வடிகான்கள் என்பன பரிசோதிக்கப்பட்டு அவற்றில் டெங்கு நுளம்புகளை இனம்கானும் நடவடிக்கையினை மட்டக்களப்பு நகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என். கிரிசுதன் தலைமையில் அதிகாரிகள் முன்னெடுத்தனர்.
கிழக்கு மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயமான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் பிரகடனப்படுத்த பட்டுள்ளதனால் இங்கு டெங்கு நுளம்புகளை இனங்கண்டு அவற்றை அழித்தொழிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுகாதார சேவைகள் பணிமனையினூடாக 200 மேற்ப்பட்ட அதிகாரிகள் இன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். கல்லடி பொதுச்சுகாதார பிரிவுகுட்பட்ட பகுதிகளில் 750 வீடுகளில் இவ் டெங்கு நுளம்புகளை இனம்கானும் பரிசோதனை நடவடிக்கையினை (15 பிரிவுகளாக சென்று- கல்லடி திருச்செந்தூர் மற்றும் உப்போடை பகுதிகளில்) அதிகாரிகள் முன்னெடுத்தனர்.
இன்று கல்லடி பிரதேசத்தல் இடம்பெற்ற இவ் டெங்குப் பரிசோதனை நிகழ்வில் முப்படையினர் மற்றும் பொதுசுகாதார உத்தியோகஸ்தர்கள் மாநகரசபையின் ஊழியர்கள் மற்றும் மட்டக்களப்பு பொது சுகாதார அலுவலக ஊழியர்கள் பணியினை முன்னெடுத்தனர். சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் ஏற்படுத்தப் பட்டுள்ளதால் அவற்றினை பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



















