காத்தான்குடியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது !


மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறை பிரிவிற்குட்பட்ட மூன்று இடங்களில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் காவற்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பை அடுத்தே நேற்று குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு பதில் நீதவான் எம்.ஐ.எம்.ரிஸ்வி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.