
(கதிரவன்)
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் 9 வருடங்கள் பிரதி அதிபராகவும், 9 வருடங்கள் அதிபராகவும் கடமையாற்றிய திருமதி சுலோசனா ஜெயபாலன் அண்மையில் சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். இவரது சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வினை கல்லூரி சமுகம் கடந்த வியாழக்கிழமை 2018.09.06 ஏற்பாடு செய்திருந்தது.
கல்லூரி அதிபர் திருமதி லிங்கேஸ்வரி ரவிராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி கே.கனகசிங்கம், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் எஸ்.அருள்குமரன், கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அ.விஜயானந்தமூர்த்தி, திருகோணமலை வலய கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன், கிழக்கு மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி வரதசீலன் ஆகியோர் கௌர விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முந்நாள் அதிபர் திருமதி ச.ஜெயபாலன் மற்றும் கௌரவ விருந்தினர்கள் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து வித்தியாலயம் வீதி வழியாக கல்லூரிக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். கல்லூரி மாணவர்களைத் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
ஸ்ரீ சண்முக இந்து மகளீர் கல்லூரியில் அதிர் திருமதி சுலொசனா ஜெயபாலின் தலைமையில் சேவைபுரிந்து ஓய்வுபெற்றுச் சென்ற ஆசிரியர்கள். இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்கள் என பலர் இந்நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து பாராட்டு தெரிவித்தமை அதிபரின் நிர்வாக திறமைக்கும் சேவைக்கும் சான்றாக அமைந்தது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், முந்நாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதாணி ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
























