(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தின் மட்.பட்/களுதாவளை புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை வித்தியாலயத்தில் 9 வருட காலமாக அதிபராக கடமையாற்றி இன்றுடன் அரசபணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 30 வருட சேவைக்காலத்தைக் கொண்ட சோமசுந்தரம் - திருநாவுக்கரசு அவர்கள் ஒரு கடமை வீரராவார். தன்னிடம் ஒப்படைக்கும் எந்தக் காரியமாக இருப்பினும் நிறைவேற்றி விட்டேன் எனப் பதில் கூறும் செயல்வீரன்.

மட்டக்களப்பின் பெயர் பெற்ற சுயம்புலிங்கப் பிள்ளையார் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் களுதாவளைக்; கிராமத்தில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை களுதாவளை மகாவித்தியலத்தில் பயின்றவர் மாத்திரமன்றி க.பொ.த. சாதாரணம், க.பொ.த. உயர்தரம் பயின்று இப் பாடசாலையிலிருந்து பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர். கலைப்பட்டதாரியான இவருக்கு அரச நியமனமான ஆசிரியத் தொழிலே கிடைத்தது. அதுவும் தான் கல்வி கற்ற பாடசாலையிலேயே முதல் நியமனம் கிடைக்கப்பெற்றது அவர் செய்த பாக்கியமாகும். தொடர்ந்து துறைநீலாவணை மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
இந் நிலையில் அதிபராக பதவியுயர்வு பெற்று பட்டிப்பளைப் பிரதேசத்தின் கச்சக்கொடி சுவாமிமலை அ.த.க.பாடசாலையில் கடமையாற்றினார். இப் பாடசாலையானது மிகவும் பின்தங்கிய பிரதேசமாகவும் மட்டக்களப்பின் எல்லைப்புறமாகவும் காணப்பட்டபோதிலும் தனது திறமையால் மாணவர்களைப் பாடசாலையில் சேர்வதற்கான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி பாடசாலையில் பிள்ளைகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.
அப் பாடசாலையிருந்து மாற்றலாகி மட்/பட்/களுதாவளை புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை வித்தியாலயத்தில் அதிபராக ஓய்வு பெறும்வரை மாணவரின் முன்னேற்றத்திற்காக பெரும் பாடுபட்டுழைத்தார்.
இவர் தனது காலத்தில் சமூகப்பணி, சமயப் பணி என பல்வேறு பணிகளிலும் சிறந்து விளங்கினார். களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வண்ணக்கராகவும், செட்டிபாளையம் கண்ணகியம்மன் ஆலயத்தின் தலைவராகவும் சமயப் பணியாற்றிவந்தார். அதுமாத்திரமன்றி களுதாவளை மத்தி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் தற்போது களுதாவளை கென்னடி விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.