சத்துருக்கொண்டான் படுகொலையில் பலியான உறவுகளுக்காக மாநகரசபை அமர்வில் அஞ்சலி



1990 செப்டம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பகுதிகளில் வைத்து 184 அப்பாவித் தமிழ் மக்களை இலங்கை இராணுவமும், அதனோடு இருந்த ஆயுதக் குழுக்களும் இணைந்து படுகொலை செய்திருந்தன. அப் படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவினை அனுஷ்டிக்கும் விதமாக மட்டக்களப்பு மாநகர சபையின் 09வது சபை அமர்வில், மரணித்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மட்டக்களப்பு மாநகர சபையின் 9ஆவது அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் கந்தசாமி ராகுநாதனின் வேண்டுகோளுக்கிணங்க சபையின் ஏகோபித்த சம்மதத்துடன் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் உயிர் நீத்த உறவுகளுக்காக இரங்கல் உரையும் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்துக்து.