மட்டக்களப்பு வாழைச்சேனை புனித திரேசாள் ஆலய கட்டட பணிக்காக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தனது சம்பள பணத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமலநேசன் தனது ஐந்தாம் மாத கொடுப்பனவான பதினையாயிரம் ரூபாவினை வாழைச்சேனை புனித திரேசாள் ஆலய கட்டட பணிக்காக ஆலய வணபிதாவிடம் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வளர்களான எஸ்.பிரதீபன், கே.தேவகானந் ஆகியோரும் கலந்து கொண்டனர். சில அரசியல் வாதிகள் சம்பள பணத்தை தமது செலவுக்கு எடுக்கும் நிலையில் பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் இவ்வாறு முழுச் சம்பளத்தையும் வழங்குவது பாராட்டத்தக்கது என வணபிதா தெரிவித்தார.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













