மட்/ புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், சஞ்சிகை வெளியீடும்



மட்டக்களப்பு புதூர் விக்ணேஸ்வரா வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், 'புத்தொளி' சஞ்சிகை வெளியீட்டு விழாவும் இன்று (27) பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மாநகரசபை உறுப்பினர்களான அசோக், சிவானந்தராஜா, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், கல்விசார் அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், பிரதேச கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கலாச்சார நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கடந்த ஆண்டில் பல சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்கள் பலர் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலையின் வரலாற்றையும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆக்கங்களையும் தாங்கிய 'புத்தொளி' சஞ்சிகை அதிதிகளால் வெளியிட்டு வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.