கல்லடியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அடிக்கல் நடும் நிகழ்வு



(எம்.எஸ்.எம்.சறூக்)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் சாரதிகளுக்கான ஓய்வறைக்குரிய அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் கல்லடியில் உள்ள அலுவலக வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. அதன் போது சாரதியாக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் திரு ஐ.பத்மநாதன் அவர்களால் பிரதான அடிகல் நடும் நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் உயர் அதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும்; சாரதிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.