மாங்காடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த முதலாவது மஹோற்சவ ஆரம்பம்
மட்டக்களப்பு மாங்காடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த முதலாவது மஹோற்சவ விஞ்ஞாபனம் 05.09.2018 இன்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14.09.2018 வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
உற்சவ கால நிகழ்வுகளாக காலை 6 மணிக்கு காலை பூஜை, 7 மணிக்கு கும்ப பூஜை, 8:30 மணிக்கு அபிஷேகம், 9 மணிக்கு மூலஸ்தான பூஜை, 9 :30 மணிக்கு வசந்த மண்டப பூஜை, 10 மணிக்கு திருக்கொடி ஏற்றம் நிகழ்த்தப்டுவதுடன்.
தொடர்து மாலை 5 மணிக்கு யாக பூஜை, 6 மணிக்கு மூலஸ்தான பூஜை, 6:30 மணிக்கு தம்ப பூஜை, 7 மணிக்கு பஜனை, சொற்பொழிவு, 8 மணிக்கு வசந்த மண்டப பூஜை, பின்னர் சுவாமி உள் வீதி, வெளிவீதி வலம் வருதல் இடம்பெறும்.













