அம்பிளாந்துறை பகுதியிலுள்ள அம்பலத்தடி சந்தியே இந்த தாமரைப்பூ சந்தி. இதில் அமைக்கப்பட்ட எழில்மிகு தாமரைப்பூ வடிவிலான சுற்றுவட்டம் அமைக்கப்பட்டதால் போராட்ட காலங்களில் தாமரைப்பூ சந்தி என சிறப்புற அனைவராலும் அழைக்கப்பட்டது.
வில்லுக்குளத்துக்கு செல்லும் வீதி, வெல்லாவெளிக்கு செல்லும்வீதி, அம்பிளாந்துறைக்கு செல்லும்வீதி, மாவடிமுன்மாரிக்கு செல்லும் வீதி என நான்கு வீதிகளும் சந்திக்கும் நாற் சந்தியிலே இந்த தமாரைப்பூ வடிவிலான சுற்றுவட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது, இது அழிக்கப்பட்டு வீதி அபிவிருத்தி அதிககாரசபை கற்களைக்கொண்டு வட்டமாக கட்டி மாடுகள் இரவு நேரங்களில் உறங்குவதற்கு விட்டிருப்பது மன வேதனையான விடயமாக அமைந்தது.
இத் தாமரைப்பூ சந்தி உடைக்கப்பட்டு ஒன்றரை வருடங்களாகியும் மட்டக்களப்பு மாவட்ட, பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மீள தாமரைப்பூ வடிவிலான தூபி அமைத்து தாமரைப்பூ சந்தி எனும் அடையாளத்தை நிலைபெற செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இது இவ்வாறு இருக்க பட்டிப்பளை மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் முதற்கட்டமாக மூன்று இலட்சம் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் தாமரைப்பூ சந்தி அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன என மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுளது.. பொது மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளை பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரிவித்தனர்.















