சுப்ரீம் செஃப் - இலங்கை | நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது கலந்துகொள்ளுங்கள்



இலங்கையின் 2018 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த சுப்ரீம் செஃப்பினை (supreme chef) தேர்ந்தெடுப்பதற்கான தொலைக்காட்சி போட்டியில் பங்குபற்றுவதற்காக போட்டியாளர்களை அழைக்கின்றோம். சமையற் கலையில் பேரார்வமும் ஆற்றலும் இருப்பதுடன் உங்களது திறமைகளை தேசிய தொலைக்காட்சியில் காண்பிப்பதற்கான ஆர்வமும் தன்னம்பிக்கையும் இருத்தல் வேண்டும். 


நீங்கள் சமையல் செய்வதில் பேரார்வம் கொண்டுள்ள ஒரு பயில்முறை (amateur) செஃப்பா..? (Chef) இது உங்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அனுபவத்தை நோக்கி செல்லுகின்ற வாய்ப்பாகும். உபசரணை தொழிற்துறையில் உங்களது வாழ்நாள் பூராகவும் செய்யக்கூடிய வாய்ப்பு மிக்க ஒரு மேடை என இதனை குறிப்பிடலாம்.

எமது தேசிய, சர்வதேச மட்டத்திலான உணவு தொடர்பான மத்தியஸ்தர் குழுவினர் முன்னிலையில் உங்கள் திறமையை நிரூபிக்க முடியும் என நீங்கள் நம்பினால் இப்போட்டி உங்களுக்கே ஆகும். இதன் வெற்றியாளர்கள் ஐக்கிய இராட்சியத்திலோ அல்லது அவுஸ்திரேலியாவிலோ உள்ள ஒரு உணவு விடுதியில் பயிற்சி பெறுவதற்கான வாழ்க்கையில் ஒரு தடவை கிடைக்கின்ற அரிய வாய்ப்பினை பெறுவார். இத்துடன் உயர்மட்டத்திலான மூன்று போட்டியாளர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்படும். இறுதிப்போட்டியில் பங்குபற்றுகின்ற எல்லோரும் இத்துறையில் தொழிலை ஆரம்பிப்பதற்கான ஆச்சரியமான வாய்ப்புக்களைப் பெறுவார்.

போட்டியாளராக நீங்கள் எவ்வாறு பங்குபற்றலாம்..?
உங்களுக்கு மிகவும் விருப்பமான (இலங்கை அல்லது சர்வதேச) உணவு வகை என்ன..? அதனை எக்காரணத்தினால் விரும்புகின்றீர்..? இக்கேள்விகள் இரண்டிற்கும் 30 செக்கன்களில் பதிலளிக்க முடியுமாயின் இப்போட்டி மதிப்பீட்டாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கல்குடாவில் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறுங்கள்

ஹோட்டல் ஈஸ்ட் லகூனிற்கு (Hotel East Lagoon) (முனை லேன், சின்ன உப்போடை வீதி, உப்போடை லேக் வீதி, மட்டக்களப்பு) ஞாயிறு 30 ஆந் திகதி செப்டெம்பர் காலை 7.00 மணிக்கு உங்களுக்கு மிகவும் விருப்பமான உணவு வகையை பற்றி கதைப்பதற்கு வாருங்கள். நீங்கள் வெற்றியடைந்துள்ளீர்களா என்பதனை தெரிந்து கொள்வதற்கு போட்டி முடிவடையும் வரை இருத்தல் வேண்டும். இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதனால் உங்கள் சிறந்த தயார்படுத்தப்பட்ட முகத்துடன் வரவும்.
நீங்கள் வெற்றிபெற்றவராக இருப்பின் செவ்வாய்க்கிழமை ஒக்டோபர் 2 ஆந் திகதி போக்குவரத்துடன் கல்குடாவிற்கு அழைக்கப்படுவீர்கள். வெற்றிகரமான போட்டியாளர்கள் கொழும்பில் ஒளிப்பதிவு செய்யப்படுகின்ற போட்டியில் பங்குபற்றுவதற்கு தெரிவுசெய்யப்படுவர் (இப்போட்டியாளர்களுக்கு வதிவிடமும் செலவுகளும் கொடுக்கப்படும்)

உள் நுழைவதற்கான தகைமை
1. 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
2. ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய போட்டி நடைபெறுகின்ற மாதங்களில் இதற்காக நேரத்தை அர்பணிப்பு செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும்
3. தற்போது சமையல் கலைத்துறையில் தொழில் புரிகின்ற எவரும் இதில் பங்குபற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்
4. Hotel School பயிலுனர்களாக இருப்போரினது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

5. முதலாவது போட்டித் தொடருக்கான எல்லா விண்ணப்பங்களும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்நறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து வர வேண்டும்

6. தேசிய அடையாள அட்டையுடன் சமூகமளிக்கவும்

மேலதிக விபரங்களுக்கு
தமிழுக்கு 0768265002
சிங்களத்திற்கு 0768265001
Supremechef2018@gmail.com