
( சசி)
சர்வதேச கராத்தே சுற்றுப் போட்டிகள் இம்முறை இலங்கையில் நடைபெற்றது. இப் போட்டியில் அமேரிக்கா, இந்தியா, இலங்கை, பாகிஸ்த்தான், நேபாளம், நெதர்லாந்து ஆகிடய நாடுகள் பங்கு பற்றின.
கொழும்பில் சனி (6) ஞாயிறு(7) தினங்களில் நடைபெற்ற போட்டிகளில்
எமது பிரதேசத்தின் சார்பாக மட்டக்களப்பு SLKRA ( Sri Lanka Karate Do Ram Association) சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி தங்கம்- 08, வெள்ளி - 03, வெங்கலம் - 09 மொத்தமாக 20 பதக்கங்களை வென்று எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
போட்டி விபரங்கள் பின்வருமாறு...
அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவி ரி.தர்சனா Kata - 3 இடம், Kumite - 3 இடம்
மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலய மாணவன் கே.கிசோதரன் Kata - 3 இடம், Kumite - 1இடத்தினையும் அடுத்த சுற்றில் தெரிவாகி அதிலும் 1 ஆம் இடத்தினை பெற்றுள்ளார்.
புனித மிக்கல் கல்லூரி மாணவன் எஸ். வியாசகன் Kata - 3 இடம், Kumite - 3 இடம்
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவி கே. ஜனோஜா Kata - 1 இடத்தினையும் அடுத்த சுற்றிலும் 1 இடத்தினையும் , Kumite - 3 இடம்
புனித மிக்கல் கல்லூரி மாணவன் கே.ஜனோஜன் Kata - 3 இடம், Kumite - 1 இடம்
அடுத்து தனியார் மூலமாக பங்குபற்றிய மாணவர்கள் ஆர்.குகதீஸ் Kata - 3 இடம், Kumite - 1 இடம் , இ. சோதரன் Kata - 1 இடம், Kumite - 2 இடம், என். தவகீசன் Kata - 2 இடம், Kumite - 1 இடம், எஸ். சனார்த்தனன் Kata - 3 இடம், Kumite - 2 இடம்
இப்போட்டிகளை பெற்றோர் சார்பாக கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன் அவர்கள் ஒழுங்குபடுத்தியதுடன்,
பயிற்றுவிப்பாளராக கே.குககுமாரராஜா தலைமையில் ஜே.சுதேஸ்கரன், கே. ஜனோஜன் ஆகியோர் கடமையாற்றினர்.





























