
psychology பல என அழைக்கப்படுகிறது. ஆன்மா/ஆவி இயல்புகளை விளக்கும் இயல்பே இதன் பொருள். பண்டைய காலம் தொட்டு மனிதன் தனது உடலுக்குள் 'ஆன்மா' எனும் ஓர் உருவமற்ற பொருள் உறைவதாகவும், இதுவே உடல் இயக்கங்களுக்கு காரணம் எனவும் கருதினான். இவ்வாறான ஆன்மாவின் இயல்புகளையும் செயல்களையும் ஆராய்ந்தறியும் இயலாகவே உளவியல் முதலில் தோன்றியது. இவ்வாறு தோன்றிய உளவியல் தத்துவ இயலின் ஒரு பகுதியாக வளர்ந்து வந்தது. அரிஸ்ரோட்டில் எனும் கிரேக்க தத்துவ பேரறிஞர் எழுதிய 'ஆன்மாவின் இயல்புகள்' எனும் நூலே உளவியலின் முதல் நூலாக கருதப்படுகிறது.
ஆங்கிலத்தில்
சில காலத்தின் பின்னர் உளவியலின் ஆய்வுப்பொருளாக கருதப்பட்டு வந்த ஆன்மா பற்றிய கருத்து வேற்றுமை எழுந்தது. இதனால் உளவியலறிர்கள் உளவியலை மனிதனது மனம், உள்ளம் என்பவற்றின் செயல்களை விளக்கும் அறிவுப் பிரிவு என கருதத் தொடங்கினர். இதுவும் சில காலம் கழித்து மாற்றமடைய தொடங்கியது. இம்மாற்றத்;திற்கான இறுதியில் உளவியலை நனவு நிலைச் செயல்களை விளக்கும் அறிவியல் என்று உளவியலாளர் கருதத் தொடங்கினர். நனவு நிலை என்பது ஒருவன் அயர்ந்து தூங்குகையில் முற்றிலும் செயலிழந்து அவன் மெல்ல விழிப்படைய படிப்படியாக அதிகரித்துச் செல்லும் நிலையாகும். இவ்விளக்கத்திலும் குறைபாடு உள்ளதென்பதை காலப்போக்கில் உளவியலாளர்கள் உணர்ந்தனர்.

இவ்வாறான உளவியல் பற்றிய அறிவானது ஓர் வகுப்பறை ஆசிரியருக்கு மிக முக்கியமானதாகும். மாணவன் தனது திறமைகளையும் மனப்பாங்கையும் அறிவையும் விழுமியங்களையும் வளர்க்கும் படி அவனுக்கு உதவும் பணியே கற்பித்தல் எனலாம். கற்பித்தலின் மூலமாக ஆசிரியர் ஓர் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றனர். கற்பித்தலானது பாட விடயத்தை சொல்லிக்கொடுப்பது என்பதிலும் பார்க்க வேறுபட்டதாகும். பாட விடயத்தில் பாண்டித்தியம் பெற்ற பட்டதாரியாயினும் அவர் தமது அறிவை மாணவருக்கு சிறந்த முறையில், அவர்கள் ஆர்வத்துடனும், ஊக்கத்துடனும் கற்க கற்பித்துத் தருவாராயின் அவரே ஓர் சிறந்த ஆசிரியர்.
இவ்வாறான ஆசிரியர்கள் கற்பித்தலுக்கான உளவியலை அறிந்திருக்க வேண்டும். ஒரு பாடம் சார்ந்து அவர் நாட்டமும், கவர்ச்சியும் கொண்டு கற்பிக்க வேண்டும். அப்போதுதான் பாடத்தின் அலகுகளையும் பயிற்சிகளையும் ஏற்பாடு செய்து மாணவர் அப்பாடத்தில் முழுமையான அறிவைப் பெற முடியும்.

ஆசிரியர்கள் தமது கற்பித்தல் செயற்பாட்டை பல தரப்பட்ட முறைகளில் கையாள வேண்டும். கற்பி;த்தல் முறையானது ஒவ்வொரு ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபடும். வகுப்பறையில் எல்லா நேரங்களிலும் ஒரே வகையான கற்பித்தல் நுட்பத்தினை கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் போது அவர்கள் உள்வாங்கும் பாடம்சார் விடயங்கள் குறைவடையலாம். எனவே வித்தியாசமான கற்பித்தல் முறைகளைக் கொண்டு கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும்.

வகுப்பறையில் ஒழுங்கை நிலைநாட்ட ஒரு குறிப்பிட்ட செயன்முறை ஏற்றதல்ல, அது ஒவ்வொரு வகுப்புக்களுக்குமேற்ப வேறுபடும். இதற்கு ஆசிரியரின் உளவியல் அறிவு அவசியமாகும். மாணவர்களின்களின் பெயர்களை அறிந்து அழைத்தல் சிறப்பானது. ஏனெனில் மாணவர்கள் குறிப்பிட்ட ஆசனங்களிலே எப்போதும் அமருவர். ஆவர்களை அறிந்து செயற்படல் மிகநன்று. விடைத்தாள்கள், பயிற்சிப்புத்தகங்கள் போன்வவற்றை மாணவர்களிடம் பரிமாறுவதற்கு குறித்த திட்டங்கள் அவசியம். ஏல்லோரும் அங்குமிங்கும் எழுந்தமாறாக திரிந்து குழப்ப நிலையை ஏற்படுத்துவதை ஆசிரியரின் உளவியல் அறிவின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
ஆசிரியர் மாணவரில் கொள்ளும் மனப்பாங்கு முக்கியமானதூகும். புன்முறுவலுடன் மாணவருக்கு ஏற்ற வகையில் உறுதியுடனும் நேர்மையுடனும் பக்கச்சார்பின்றி அன்புடனும் பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். இதற்கு ஆசிரியருக்கு உளவியல் பற்றிய அறிவு இருத்தல் வேண்டும். இதன் மூலமே வகுப்பறை கற்பித்தல் செயற்பாட்டை வினைத்திறனாக்க முடியும்.
ஆசிரியர் எப்போதும் பண்பான சொற்களைப் பிரயோகிக்க வேண்டும். மற்றும் அதிகார தொனியில் கதைக்க கூடாது. இதுவும் ஆசிரியருக்கு உளவியல் பற்றிய அறிவின் மூலமே கிடைக்கின்றது.
வகுப்பறையிலே ஒழுங்கினை ஏற்படுத்த அதிகாரத்தை பயன்படுத்தலாகாது. ஆதிகாரம் மாணவர்களிடையே அமைதியை ஏற்படுத்தாது. ஆசிரியர் தனது ஆளுமைப்பண்புகளின் மூலமும் கற்பிக்கும் திறமையின் மூலமுமே கட்டுப்பாடுகளை மாணவர்களுக்கு விதிக்க வேண்டும்.
லூவின், லிப்பிற், வைற் ஆகியோர் வகுப்பறையில் மேற்கொள்கின்ற தலைமைத்துவம் எவ்வாறு மாணவர்களின் செயற்பாடுகள், ஒழுக்கம், மனப்பாங்கு என்பவற்றில் தாக்கம் செலத்துகின்றது என ஆய்வுசெய்தனர். பாடநேர இறுதியில் நாடகத்திற்கான முகமூடி செய்யும் வேலை வழங்கப்பட்டது. 3 குழுக்களாக மாணவர்கள் எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி பிரிக்கப்பட்டனர். அதன் முடிவில் தலையிடாத் தலைவின் கீழ் பணிபுரிந்த 5 மாணவர்கள் ஈடுபாடின்றி வேலை செய்தனர், அதிகாரத்தின் மூலம் கையாண்ட தலைவரிக் கீழ் பணியாற்றிய மாணவர்கள் தலைவர் இருக்கும் நேரம் மாத்திரமே வேலை செய்தனர். ஆனால் அன்பு, பணிவின் கீழ் ஒழுங்கமைப்பை மேற்கொண்ட 5 மாணவர்களும் தலைவர் இருக்கும் போது மாத்திரமின்றி இல்லாத வேளைகளிலும் தமது பணியினை முன்னெடுத்துக் கொண்டே காணப்பட்டனர். இதிலிருந்து அடக்குமுறையிலன்றி அன்பு பணிவு மூலமே மாணவர்களின் அறிவு திறன் மனப்பாங்கு என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென கருதினர்.
மேற்குறிப்பிட்டவாறு ஓர் வகுப்பறை ஆசிரியருக்கு கற்பி;த்தலுக்கான உளவியல் பற்றிய அறிவு காணப்பட வேண்டும். இதன் மூலமாக மாணவர்களின் மனநிலையை புரிந்து கற்பித்தலினை சிறப்பானதாக கையாள வேண்டும்.
2ம் வருடம்,
கல்வியியல் சிறப்புக்கற்கை,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.